தலையில் காயத்துடன் முதியவர் பிணம்


தலையில் காயத்துடன் முதியவர் பிணம்
x

கோட்டுச்சேரி

காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூம் வாசலில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் தலையில் காயத்துடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என தெரியவில்லை. அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story