ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி


ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 19 May 2022 5:37 PM GMT (Updated: 19 May 2022 5:40 PM GMT)

பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேசன் மற்றும் டி.சி.எம். நிறுவனம் இணைந்து நடத்தும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி பெற்றது.

புதுச்சேரி

பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேசன் மற்றும் டி.சி.எம். நிறுவனம் இணைந்து நடத்தும் 8 அணிகள் கலந்துகொள்ளும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி கேப்- சீகேம் மைதானம் 1-ல் இன்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் சீகேம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பத்மா தாமோதரன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

முதல் போட்டியில் ஈகிள்ஸ் அணியும், ஸ்மாஷர்ஸ் அணியும் மோதின. இதில் ஸ்மாஷர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் அவென்ஜர்ஸ் அணியும், பேட்ரியாட் அணியும் களம் கண்டன. இதில் பேட்ரியாட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மதியம் நடந்த இன்னொரு போட்டியில் வாரியர்ஸ் அணி, டைட்டன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு ராயல்ஸ், கிங்ஸ் அணிகளும், 11 மணிக்கு பேட்ரியாட், வாரியர்ஸ் அணிகளும் மோதுகின்றன. மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் அவென்ஜர்ஸ், கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. போட்டிகள் வருகிற ஜூன் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் பேன்கோர்டு ஆப் மூலம் நேரலையில் ஒளிரப்பாகிறது.


Next Story