இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு புதிய வாகனம்


இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு புதிய வாகனம்
x

புதுச்சேரி வைத்திலிங்கம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு புதிய வாகனம் வாங்கப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரி வைத்திலிங்கம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியின் பயன்பாட்டிற்காக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எடுத்து செல்வதற்காக ரூ.10 லட்சத்திற்கு புதிய வாகனம் (மினி லாரி) வாங்க நிதி ஒதுக்கினார்.

இந்தநிலையில் புதுவை சட்டசபை அருகே உள்ள எம்.பி. அலுவலகத்தில் புதிய வாகனத்தை இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்துகொண்டு புதிய வாகனத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகள், மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story