'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்


நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க  கடைசி நாள்
x

‘நீட்’ தேர்வு அல்லாத இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி

'நீட்' தேர்வு அல்லாத இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி சென்டாக் கன்வீனர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது:-

10,848 இடங்கள்

2023-24-ம் கல்வியாண்டிற்கான 'நீட்' தேர்வு அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளான பி.டெக், பி.எஸ்சி. (விவசாயம், நர்சிங்), பிசியோதெரபி, பி.பார்ம், பி.ஏ., எல்.எல்.பி. (சட்டம்) மற்றும் பட்டய படிப்புகள், இளங்கலை அறிவியல் மற்றும் வணிக படிப்புகள் (பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ.) மற்றும் இளநிலை நுண்கலை படிப்புகளில் மொத்தம் 10 ஆயிரத்து 848 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 17-ந் தேதி முதல் சென்டாக் இணையதளத்தில் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை 13 ஆயிரத்து 95 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நாளை கடைசிநாள்

இந்த படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story