ஏரி, குளங்களில் மண் எடுக்க கட்டணம் உயர்வு


ஏரி, குளங்களில் மண் எடுக்க கட்டணம் உயர்வு
x

புதுவையில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் மண் எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவையில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் 84 ஏரிகள், 454 குளங்கள் உள்ளன. அவற்றில் வண்டல் மண், களிமண், செம்மண் போன்றவற்றை விவசாய பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டணத்தை செலுத்தி மண் எடுத்துக்கொள்ளலாம்.

இதற்காக மாட்டு வண்டிக்கு ரூ.50, டிராக்டருக்கு ரூ.100, லாரிக்கு ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். இப்போது இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மாட்டுவண்டிக்கு ரூ.125, டிராக்டருக்கு ரூ.325, லாரிக்கு ரூ.1,000 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக கனிமங்கள் ஒழுங்குமுறை மேம்பாட்டு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


Next Story