அரசு வேளாண் கல்லூரி மாணவா்கள் களப்பயிற்சி


அரசு வேளாண் கல்லூரி மாணவா்கள் களப்பயிற்சி
x

அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் நெடுங்காடு கிராமத்தில் களப்பயிற்சிக்கு சென்றனர்

நெடுங்காடு

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கிவரும் புதுச்சேரி அரசின் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் 98 மாணவர்கள் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்ள நெடுங்காடு கிராமத்தில் செயல்படும் மருதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 3 நாட்கள் களப்பயிற்சி சென்றனர். நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகளுமான நெடுங்காடு ராஜேந்திரன், செல்லூர் மூர்த்தி, கோட்டுச்சேரி ஞானவடிவேல், கொளக்குடி அய்யப்பன், குரும்பகரம் ரகுநாதன், பஞ்சாட்சரபுரம் ஆனந்த், அன்னவாசல் பத்மநாபன், திருநள்ளாறு மூர்த்தி ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து மாணவ மாணவியருக்கு பயிற்சி அளித்தனர். விவசாயப் வேலைகளுக்கு பணியாளர்கள் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம், அதனால் ஏற்படும் சீற்றம், உற்பத்திக்கு போதிய விலை கிடைப்பதில்லை, கொள்முதல் மையங்கள் இல்லை, காப்பீடு பலருக்கு கிடைப்பதில்லை, பன்றி, மயில், எலிகள் தொல்லை, பொருத்தமான எந்திரங்கள் தேவை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முகாமில் கலந்தாலோசிக்கப்பட்டது.


Next Story