மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மாநாடு


மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மாநாடு
x

புதுச்சேரி

புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் வேலைவாய்ப்பு மையம் சார்பில் மாணவர்களுக்கான தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல் மாநாடு 2 நாட்கள் நடந்தது. மாநாட்டில் துறைகளின் டீன் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விநாயகா மிஷன் பல்கலைக்கழக தரக்கட்டுப்பாட்டு இயக்குனர் ஞானசேகர், புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் அமைப்பு இயக்குனர் நாகப்பன், கல்வியியல் பிரிவு துணை இயக்குனர் ராஜன் சாமுவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

அம்ரிதா பயிற்சி மையத்தின் மொழியியல் நிபுணர் அம்ரிதா, தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சக திட்ட தலைவர் சக்திவேல் காளியப்பன், சென்னை ஜென்ரைஸ் குளோபல் நிறுவன மேலாளர் தீபக், வெராண்டா ரேஸ் நிறுவன பயற்சி தலைவர் சூர்ய பிரகாஷ், சென்னை ஜோஹோ நிறுவன மனிதவள மேம்பாட்டு தலைவர் சார்லஸ் காட்வின், கோவை கே.எம்.சி.எச்.அலைடு ஹெல்த் சயின்ஸ் நிறுவன மனிதவள துறை அலுவலக மேலாளர் ராமமூர்த்தி, குவாட் கிரேக் நிறுவனர் விக்னேஷ் மாரிமுத்து, சேலம் காவேரி மருத்துவமனை மனிதவள அதிகாரி மயூரி, சென்னை பாஷ் லேம் நிறுவன தென்னிந்திய சேவை மேலாளர் ஜெயஸ்ரீ, துறை உதவி பேராசிரியை பிரியதர்ஷினி, பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ உதவியாளர் கவுசல்யா ஆகியோர் கலந்துகொண்டு வேலை வாய்ப்புக்காக எப்படி தயாராக வேண்டும், தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், மருத்துவ துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் போன்றவை குறித்து பேசினர். இதில் துறையை சேர்ந்த இறுதியாண்டு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாட்டினை துறையின் வேலைவாய்ப்பு மைய அதிகாரி தமிழ்சுடர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.


Next Story