போதைபொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்
காரைக்கால் கல்வித்துறை மற்றும் புதுவாழ்வு மது போதை மறுவாழ்வு மையம் இணைந்து மாணவ மாணவிகளுக்கு போதைபொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
காரைக்கால்
காரைக்கால் கல்வித்துறை மற்றும் புதுவாழ்வு மது போதை மறுவாழ்வு மையம் இணைந்து, கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில், போதை பொருட்களின் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
முகாமுக்கு மாவட்ட மேல்நிலை பள்ளி துணை இயக்குனர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். குழந்தைகள் நலகுழுமத்தின் தலைவர் வக்கீல் சங்கரி, உறுப்பினர்கள் புவனேஸ்வரி, மலர்விழி ஆகியோர் வளர் இளம் பருவத்தினற்கு ஏற்படும் பிரச்சனைக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். புதுவாழ்வு மைய பொறுப்பாளர் மகேஸ்வரி மாணவர்களுக்கு போதைப் பொருளின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை எடுத்துரைத்தார். இறுதியில் பள்ளி துணை முதல்வர் கனகராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story