விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்


விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
x

26-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் சாா்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் வழங்கப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் வருகிற 26-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமரச முறையில் தீர்த்துக் கொள்வது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் அருகே நடந்தது.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் செந்தில்குமார் தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் புதுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) இளவரசன், நீதிபதி சோபனாதேவி மற்றும் வக்கீல் சங்க தலைவர் குமரன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story