பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
மணப்பட்டு கிராமத்தில் பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
பாகூர்
பாகூர் தொகுதி மணப்பட்டு கிராமத்தில் பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க விக்ரமன் முன்னிலை வகித்தார். தொகுதி தலைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு 250 பேருக்கு புடவை மற்றும் சர்க்கரை மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் புவனசுந்தரம், மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் மனோகரன், தொழிலதிபர் ஜெகநாதன், தேவநாதன், குமார், பிரகாஷ், ராதா, வெங்கடேசன், சேகர், ராதாகிருஷ்ணன், அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தொழிலதிபர் அருள், புதுக்குப்பம் கணேசன் ஆகியோர் தலைமையில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.