கோவில் கும்பாபிஷேக விழாவில் தேனீக்கள் கொட்டி 30 பக்தர்கள் காயம்


கோவில் கும்பாபிஷேக விழாவில் தேனீக்கள் கொட்டி 30 பக்தர்கள் காயம்
x

அம்பகரத்தூரில் கோவில் கும்பாபிஷேக விழாவில் தேனீக்கள் கொட்டியதில் 30 பக்தர்கள் காயமடைந்தனர்.

அம்பகரத்தூர்

அம்பகரத்தூரில் கோவில் கும்பாபிஷேக விழாவில் தேனீக்கள் கொட்டியதில் 30 பக்தர்கள் காயமடைந்தனர்.

அய்யனார் கோவில்

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கோவில் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு நறுமண புகை போடப்பட்டது. அப்போது கோவிலுக்கு அருகில் ஆலமரத்தில் இருந்து தேனீக்கள் படை, படையாக கலைந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் தேனீக்கள் சரமாரியாக பக்தர்களை கொட்டின.

30 பக்தர்கள் காயம்

தேனீக்கள் கொட்டியதில் அம்பகரத்தூரை சேர்ந்த ஜெயராமன் (வயது 68), சந்தானம் (61), சரவணன் (34), வெற்றிவேல் (52) உள்பட 30-க்கும் மேற்பட்டோருக்கு உடலில் வீக்கம் ஏற்பட்டு காயம் அடைந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் மற்றும் அம்பகரத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களை முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் கும்பாபிஷேக விழாவில் தேனீக்கள் கொட்டியதில் 30 பக்தர்கள் காயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story