திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன தீர்த்தவாரி


திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன தீர்த்தவாரி
x

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, தீர்த்தவாரி நடந்தது.

காரைக்கால்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, தீர்த்தவாரி நடந்தது.

சனீஸ்வரர் கோவில்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா உற்சவம் தொடங்கி நடந்து வந்தது. நேற்று இரவு 9-ம் நாள் பிரணாம்பிகை- தர்பாராண்யேஸ்வரர் பொன்னூஞ்சல் வழிபாடு நடந்தது. நிறைவுநாளான இன்று காலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜர், பிரம்ம தீர்த்த கரைக்கு எழுந்தருளினார்.

பின்னர் 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், கோபூஜை நடத்தப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

தீர்த்தவாரி

முடிவில், நடராஜர் பிரம்ம தீர்த்தத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து, சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் ஊடல் உற்சவம் நடந்தது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை காட்டப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் வாரிய தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story