ரெயில்வே ஊழியர், மனைவி வீடு புகுந்து தாக்கப்பட்டனர்
புதுவை அருகே ரெயில்வே ஊழியர், மனைவி மற்றும் மகள் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மூலக்குளம்
புதுவை அருகே ரெயில்வே ஊழியர், மனைவி மற்றும் மகள் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரெயில்வே ஊழியர்
புதுச்சேரி அருகே உள்ள ரெட்டியார்பாளையம் சிவகாமி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவர் ரெயில்வேயில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். அதே பகுதியில் அவருக்கு சொந்தமான காலிமனையில் சுரேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை அப்புறப்படுத்தும்படி சீனிவாசன் கூறினார்.
அப்போது அதே தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், பத்மநாபன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி சீனிவாசனை வீடு புகுந்து தாக்கினர். மேலும் சீனிவாசனின் மனைவி கஸ்தூரிபாய் மற்றும் அவரது மகளையும் திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். மேலும் அவர்களின் செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.
3 பேர் மீது வழக்கு
இது குறித்து சீனிவாசன் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையம், வடக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சீனிவாசன் புதுவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
நீதிபதி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், சீனிவாசனையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கோபாலகிருஷ்ணன், பத்மநாபன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.