முன்னெச்சரிக்கையாக 7 பேர் கைது
ஜனாதிபதிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
ஜனாதிபதிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கருப்புக்கொடி
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று புதுச்சேரி வந்தார். அவருக்கு எதிராக அரியாங்குப்பம் பகுதியில் சிலர் கருப்புக்கொடி காட்ட போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் தீனா, ஒருங்கிணைப்பாளர் சந்திரன், செயலாளர் பரத், துணை அமைப்பாளர் கர்ணா ஆகிய 4 பேரை சிறப்பு அதிரடி போலீசார் கைது செய்து அரியாங்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.
மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாததை கண்டித்து ஜனாதிபதிக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்றதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதேபோல் கருப்பு கொடி காட்ட முயன்றதாக இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் கலைபிரியன், சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் ஜெபின், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகிய 3 பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.