விஷகுளவிகள் கொட்டி 6 மாணவர்கள் மயக்கம்


விஷகுளவிகள் கொட்டி 6 மாணவர்கள் மயக்கம்
x

பாகூர் அரசு பள்ளியில் விஷகுளவிகள் கொட்டியதில் 6 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர்.

பாகூர்

பாகூர் அரசு பள்ளியில் விஷகுளவிகள் கொட்டியதில் 6 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர்.

குளவி கூடு

பாகூரில் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகினறனர். இந்தநிலையில் பள்ளி நுழைவு வாயில் அருகில் உள்ள ஒரு மரத்தில் விஷகுளவிகள் கூடு கட்டி இருந்தன. அதனை யாரும் சரியாக கவனிக்கவில்லை.

இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது குளவி கூடு கலைந்து குளவிகள் மாணவர்களை நோக்கி பாய்ந்து சரமாரியாக கொட்டின. இதனால் மாணவர்கள் அலறி அடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர்.

மாணவர்கள் மயக்கம்

இருப்பினும் குளவிகள் கொட்டியதில் மாணவர்கள் அன்பரசன் (வயது 15), ஹரி சுதன் (17), தீபக் (14), மணியரசன் (17), அபிஷேக் (14), மதன் (13) ஆகிய 6 மாணவர்கள் உடலில் வீக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். மேலும் பள்ளி அருகே நடந்து சென்ற பாகூரை சேர்ந்த உதயகுமார் என்பவரும் குளவி கொட்டியதில் உடலில் வீக்கம் ஏற்பட்டு காயம் அடைந்தார். இதை யடுத்து காயம் அடைந்த மாணவர்களை, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பாகூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அவர்களில், 4 பேர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல் குடியிருப்பு பாளையத்தில் 100 நாள் வேலையில் ஈடுபட்ட பெண்களையும் விஷ குளவிகள் கொட்டின. இதில் காயம் அடைந்த பெண்கள் சிலர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.


Next Story