2 கடைக்காரர்கள் கைது
புதுவையில் போதைப்பொருட்கள் விற்ற 2 கடைக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி புவன்கரே வீதியில் பள்ளிக்கூடம் அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதைபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உருளையன்பேட்டை போலீசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள கடைகளை சோதனையிட்டனர்.
அப்போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து கடைகளின் உரிமையாளர்கள் காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 50), முதலியார்பேட்டையைசேர்ந்த ராஜா (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story