திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு
x

திருப்பதியில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் மக்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி இந்த மாதத்துக்கான சாமி தரிசன அனுமதி 7-ந்தேதி நடக்கிறது. அதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசன டோக்கன்கள் திருப்பதி மகதி கலை அரங்கத்தில் உள்ள கவுண்ட்டர்களிலும், திருமலையில் உள்ள பாலாஜி நகர் சமுதாயக் கூடத்திலும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story