இன்ஸ்டாவில் 56 லட்சம் பாலோயர்ஸ்: தேர்தலில் கிடைத்தது 155 வாக்குகள்-நடிகருக்கு நேர்ந்த சோகம்


இன்ஸ்டாவில் 56 லட்சம் பாலோயர்ஸ்: தேர்தலில் கிடைத்தது 155 வாக்குகள்-நடிகருக்கு நேர்ந்த சோகம்
x
தினத்தந்தி 23 Nov 2024 9:23 PM IST (Updated: 24 Nov 2024 1:50 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் உள்ள ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் வெர்சோவா தொகுதியில் அஜாஸ் கான் போட்டியிட்டார்.

மும்பை,

மராட்டிய சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகரும், பிரபல பிக்பாஸ் போட்டியாளரும், சோஷியல் மீடியா பிரபலமுமான அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். அஜாஸ் கானை இன்ஸ்டாகிராமில் 56 லட்சம் பேர் பின்தொடரும் நிலையில் அவருக்கு வெறும் 155 வாக்குகளே விழுந்துள்ளது கவனம் பெற்றுள்ளது. மராட்டியத்தில் உள்ள ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் வெர்சோவா தொகுதியில் அஜாஸ் கான் போட்டியிட்டார்.

தேர்தலில் படு தோல்வியை சந்தித்து இருக்கும் ஆஜஸ் கான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது பழியை போட்டுள்ளார். ஆஜஸ் கான் கூறுகையில், " இவை அனைத்து இவிஎம்களின் விளையாட்டுத்தான். பல ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட தோல்வி அடைந்து இருக்கிறார்கள். நான் ஒரு சமூக பணியாளர். மக்க்ளின் குரலாக ஒலிக்க தொடர்ந்து பாடுபடுவேன்" என்றார்.


Next Story