சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.. மிசோரம் முதல்-மந்திரி அதிரடி


சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.. மிசோரம் முதல்-மந்திரி அதிரடி
x

மிசோரம் மாநிலத்தில் ஒழுங்காக வேலை செய்யாத அரசு ஊழியர்களை கண்டறிந்து அவர்களை வேலையில் இருந்து விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஐசால்:

மிசோரம் மாநில கல்வித் துறையின் முன்முயற்சிகள் தொடர்பாக ஐசால் நகரில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்-மந்திரி லால்துஹோமா கலந்துகொண்டு பேசியதாவது:-

அரசுத் துறைகளில் தகுதியற்ற அனைத்து ஊழியர்களையும் விடுவிப்பது நல்லது என்று கருதுகிறோம், அவர்கள் இனி அரசு வேலைக்கு தகுதியற்றவர்கள். உரிய விதிமுறைகளின்படி அவர்கள் பணியில் இருந்து வெளியேறுவது நல்லது. சிறப்பாக வேலை செய்யும் திறமையான ஊழியர்களை பணியமர்த்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

தகுதிவாய்ந்த மற்றும் திறமையான பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநில அரசு ஊழியர்களின் பணிக்காலம் மற்றும் அவர்களின் சேவைகளை மறுபரிசீலனை செய்ய அந்தந்த துறைகளில் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

அனைத்து திட்டங்களும் முறையாகவும் திறம்படவும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story