பணமோசடி வழக்கு: கர்நாடக முன்னாள் மந்திரி கைது


பணமோசடி வழக்கு: கர்நாடக முன்னாள் மந்திரி கைது
x
தினத்தந்தி 12 July 2024 9:34 PM GMT (Updated: 13 July 2024 6:26 AM GMT)

பணமோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் மந்திரியை அமலாக்கத்துறை கைது செய்தது.

பெங்களூரு,

கர்நாடக மாநில மகரிஷி வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் மகரிஷி வால்மீகி வளர்ச்சி வாரியத்தின் முன்னாள் தலைவர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரியாக இருந்த நாகேந்திரா தனது மந்திரி பதவியை கடந்த மாதம் 6ம் தேதி ராஜினாமா செய்தார்.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடைபெற்றது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பணமோசடி வழக்கு தொடர்பாக கடந்த 4ம் தேதி முதல் நேற்று முன் தினம் இரவு வரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் முன்னாள் மந்திரியுமான நாகேந்திராவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் சோதனையும் நடைபெற்றது.

இந்நிலையில், பல மணிநேரம் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனை தொடர்ந்து பணமோசடி வழக்கில் முன்னாள் மந்திரி நாகேந்திராவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.


Next Story