எல்லை பாதுகாப்பு படையில் காவலர் பணி.... 275 பணியிடங்கள்
எல்லை பாதுகாப்பு படையில் காவலர் (BSF) விளையாட்டு ஒதுக்கீடு(sports quota) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படையில் காவலர் பணிக்கு (BSF) விளையாட்டு ஒதுக்கீடு(sports quota) சார்ந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 275
ஆண்கள்: 127
பெண்கள்:148
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டுத் தகுதிகள்;
i) விளம்பரத்தின் இறுதித் தேதியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டி நிலைகளில் பங்கேற்ற அல்லது பதக்கம் வென்ற வீரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
ii) கடந்த 02 ஆண்டுகளில் அவர்/அவளால் பெறப்பட்ட எந்த ஒரு உயர்ந்த பதக்கத்திற்கும் விண்ணப்பதாரருக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். எந்தவொரு தேர்வாளர் குறிப்பிட்ட போட்டியில் 01 பதக்கங்களுக்கு மேல் பெற்றிருந்தால், அவர்/அவள் போட்டியில் பெற்ற உயர்ந்த பதக்கம்/நிலைக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும் மற்றும் தனித்தனி போட்டிகளுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்கள் ஒட்டுமொத்தமாக சேர்க்கப்படாது.
வயது வரம்பு :18 முதல் 23 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
ஓ.பிசி(கிரீமி லேயர்) OBC (Non Creamy Layer) - 3 ஆண்டுகள்
எஸ்.சி-எஸ்.டி(SC & ST )- 5 ஆண்டுகள்
தேர்வு முறை: உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு,மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க: https://rectt.bsf.gov.in
ஆன்லைன் விண்ணப்பிக்க தேதி ஆரம்பம்: 01 டிசம்பர் 2024 (அதிகாலை 1:00)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30 டிசம்பர் 2024 (இரவு 11:59)
விண்ணப்பக் கட்டணம் செலுத்த; https://rectt.bsf.gov.in மூலம் விண்ணப்பக் கட்டணமாக மட்டுமே வேறு ஏதேனும் கட்டண முறையுடன் பெறப்பட்ட விண்ணப்பம் சுருக்கமாக நிராகரிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பிசி(கிரீமி லேயர்), (UR, OBC , EWS) பிரிவைச் சேர்ந்த ஆண் தேர்வர்கள் ரூ. 147.20/- ஆண்லைனில் செலுத்த வேண்டும்.
பெண்கள் மற்றும் எஸ்.சி-எஸ்.டி (FEMALE,SC & ST) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.