ஆகஸ்டு மாத ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்


August month Raasipalan in Tamil
x
தினத்தந்தி 31 July 2024 11:31 AM GMT (Updated: 31 July 2024 11:34 AM GMT)

தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஆகஸ்டு மாத பலன்கள்.

தனுசு

தனுசு ராசி அன்பர்கள், பார்ப்பதற்கு மிகவும் சாதுவாகவும் அமைதியாகவும் இருப்பார்கள். சுயமரியாதைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவராகத் திகழ்வார்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகதர்களுக்கு இதுவரை மறுத்து வந்த மேலிடத்திலிருந்து பதவி உயர்வுக்கான உத்தரவு உங்களை தேடி வரும். இனி கவலை வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவும் கிட்டும்.

வியாபாரிகளுக்கு தங்களுக்கு சோதனைகள் மறைந்து அவையாவும் சாதனையாக மாறக்கூடிய காலமாதலால் வியாபாரத்தில் மற்ற போட்டியாளர்கள் பலரும் மூக்கில் விரல் வைக்கும் வகையில் வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு கைத்தொழில் குடும்பத் தேவைகளுக்கு உறுதுணையாக இருக்கும். ஆதலால், நீங்கள் தங்களுடைய தனித்திறமையை பயன்படுத்தி அதாவது, டெய்லரிங், அழகு நிலையங்கள் மற்ற மற்ற சுயதொழிலை ஆரம்பித்து லாபத்தை ஈட்டுவீர்கள்.

கலைஞர்களுக்கு, அவர்களின் பெருமைகளையும் திறமைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் வகையில் பல்வேறு சிறப்பான வாய்ப்புகள் இந்த மாத காலகட்டத்தில் மிக அதிகமாக இருக்கும்.

மாணவர்கள், படிப்பில் அதிகமான அக்கறையுடன் திரும்பத் திரும்ப எழுதி பார்த்தால்தான் தாங்கள் தங்கள் இலக்கினை எட்ட இயலும். இவ்வாறு செய்தால் அதிக மதிப்பெண்களுடன் தங்களுக்குப் பிடித்த துறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

அதிர்ஷ்ட தேதிகள்: 3, 27

அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், வியாழன்

தவிர்க்க வேண்டிய கிழமைகள்: சனி, புதன்

அதிர்ஷ்டக்கல்: புஷ்பராகம்

அதிர்ஷ்ட நிறங்கள்: பொன்னிறம், சிவப்பு

தவிர்க்க வேண்டிய நிறங்கள்: நீலம், பச்சை

பரிகாரம்

கீழ் வரும் பிள்ளையாரின் மந்திரத்தை ஒன்பது முறை படியுங்கள். சனியால் வரும் கெடுபலன்களை குறைக்க வல்லது.

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா

ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே

ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா

ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா

மகரம்

மகர ராசி அன்பர்களே.. அலுவலக வேலை நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்ல நேரும் போது அதன் மூலமாகவும் உங்களுக்கு பெருமளவில் நன்மைகள் கிட்டும்.

வியாபாரிகளுக்கு, அவர்களின் வெற்றியைப் பார்த்து வியாபாரிகளின் போட்டியாளர்கள் தங்களிடம் சரணடைவர். வியாபார வெற்றிக்காக மேலும் புதிய புதிய உத்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத் தலைவிகளில் ஒரு சிலர் தொழில் துவங்கும் வாய்ப்பு அதிகம் உண்டு. அது உங்கள் வாழ்வின் எல்லைவரை உதவியாக இருக்கும்.

கலைஞர்களில் சிலருக்கு பிரபலமான நிறுவனங்களின் பரிசு மற்றும் பாராட்டுகள் வந்து சேரும். பொறாமையால் சக கலைஞர்களால் ஏற்படுத்தப்படும் தடைகளை தகர்த்தெறிவீர்கள்.

மாணவர்கள், கல்வியில் அலட்சியம் காட்டாமல் தாங்கள் முன்பை விட அதிக அக்கறை காட்டி வந்தால்தான் தாங்கள் நினைத்த துறையைப் பெற உதவியாக இருக்கும். இல்லையெனில் மதிப்பெண்கள் குறைவாக பெற்று எதிர்மாறான பலன்களைத் தரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 5, 8, 26

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

தவிர்க்க வேண்டிய கிழமைகள்: திங்கள்,செவ்வாய்

அதிர்ஷ்டக்கல் : நீலம்

அதிர்ஷ்ட நிறங்கள்: கடல் பச்சை, கரு நீலம்

தவிர்க்க வேண்டிய நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்

சனிஸ்வர பகவானை சனிக் கிழமைகளில் வணங்குங்கள். தினமும் எள் சாதம் வைத்து படையுங்கள். பின் காகத்திற்கு வையுங்கள்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்கள், பொதுவாக பருத்த உடலும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்கள். பார்ப்பதற்கு மெதுவான செய்கைகளை உடையவராகத் தெரிவார்கள். ஆனால், உண்மையில் தங்கள் வேலைகளை சாமர்த்தியமாக முடித்துக் காட்டுபவர்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு அவர்கள் நினைத்த அலுவலகத்திற்கு இடமாற்றம் ஏற்படும். இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்து வேறு ஊர்களுக்கு சென்று பணிபுரிய நேரலாம். வீட்டை விட்டு பிரிகிறோமே என்ற வருத்தத்தை தவிர்க்கவும்.

வியாபாரிகள், சுய தொழிலாக இருந்தாலும், கூட்டுத் தொழிலாக இருந்தாலும் சற்று கவனம் தேவை. வியாபார நிமித்தமாக வெளிநாடு அல்லது வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

குடும்பத் தலைவிகள், குடும்ப நிர்வாகத்தைத் திறம்பட நடத்தி நற்பெயர் பெறுவீர்கள். கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வீர்கள்.

கலைஞர்களுக்கு மிகச் சிறப்பான காலம் இது. இதனை நன்கு பயன்படுத்தி பணமும் புகழும் பெற முற்படுங்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரக் கூடிய காலமிது.

மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். சுற்றுலாக்களுக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போது நீர் நிலைகளில் குளிக்கும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள் : 17, 23

அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி

தவிர்க்க வேண்டிய கிழமைகள் : திங்கள், செவ்வாய்

அதிர்ஷ்டக்கல் : நீலம்

அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், ஊதா, பச்சை

தவிர்க்க வேண்டிய நிறங்கள் : வெள்ளை, சிவப்பு

பரிகாரம்

கீழ் வரும் சனி காயத்ரி மந்திரத்தை சொல்வதன்மூலம் ஆபத்துகளில் இருந்து தப்பலாம்.

சனியின் காயத்ரி மந்திரம்

காகத் வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்தஹ ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை மனதிலேயே பாராயணம் செய்வது நல்லது. வீட்டிலேயே சனிக்கிழமை தோறும் ஒன்பது முறையாவது சொல்லி வழிபடுவது நலம்.

மீனம்

மீன ராசி அன்பர்கள், யாருடைய உதவியும் இன்றி தானாகவே படிப்படியாக முன்னுக்கு வந்து விடுவார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். தைரியமாக எந்த செயலையும் செய்வார்கள். பெரிய வேலைகளை மிகச் சாதாரணமாகச் செய்து முடிப்பவர்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகதர்கள், மேலதிகாரிகளிடம் அமைதியாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. தேவையற்ற விசயங்களில் அனாவசியமாக தலையிடும் உங்கள் போக்கை தவிர்ப்பது அவசியம்.

வியாபாரிகள், வெளியூர் வியாபாரத்திற்காக அடிக்கடி செல்பவர்கள் பயணத்தின்போது தங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் எடுத்துச் செல்வது நல்லது.

குடும்பத் தலைவிகள், தங்கள் குடும்பத்தை பராமரிப்பதில் நிர்வாகத்திறமைப் பளிச்சிடும். மாமியார் மருமகள் உறவு சமாதானமாக செல்லும். மற்றபடி வீடு கட்டும் திட்டம் நிறைவேறும்.

கலைஞர்களுக்கு வெளியூர் பயணங்கள் அடிக்கடி ஏற்பட இடமுண்டு. அங்கு தங்கள் உடைமைகளான செல்போன் போன்ற பொருட்களில் கவனம் தேவை. உங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு தேடி வரும்.

மாணவர்கள், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்காமல் அன்றாட பாடங்களை அன்றன்றே படித்து வந்தால் மட்டுமே தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

அதிர்ஷ்ட தேதிகள் : 3, 21

அதிர்ஷ்ட கிழமை :திங்கள், வியாழன்

தவிர்க்க வேண்டிய கிழமைகள் : புதன், சனி

அதிர்ஷ்டக்கல் : புஷ்பராகம்

அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெள்ளை

தவிர்க்க வேண்டிய நிறங்கள் : பச்சை, நீலம்

பரிகாரம்

வியாழனின் மந்திரம்

குருவே சர்வ லோகானாம்

பிஷஜே பல ரோகினாம்

நிதயே சர்வ வித்யானாம்

ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே நமஹ

வியாழன் தோறும் 27 முறை சொல்லி வழிபடுவது நல்லது.

மற்ற ராசிகளுக்கான பலன்களை அறிந்துகொள்ள.. https://www.dailythanthi.com/monthly-horoscope

கணித்தவர்: திருமதி. N.ஞானரதம்

Cell 9381090389


Next Story