இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்


இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்
x
தினத்தந்தி 19 Jun 2022 1:30 AM GMT (Updated: 19 Jun 2022 1:31 AM GMT)

உறவினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் 1939-ம் ஆண்டு சென்னை ராணிமேரி கல்லூரியில் முதல் வகுப்பில் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார். தனது சகோதரர்களைப் போல தானும் ஒரு பொறியியலாளராக வேண்டும் என முடிவு செய்தார் லலிதா.

ல்வி, பெண்களுக்கு எட்டாக்கனியாக இருந்த காலத்தில், 15 வயதில் திருமணம் செய்து, 18 வயதில் கணவனை இழந்து, கைக்குழந்தையோடு நின்றபோதும், அனைத்து விதிகளையும் உடைத்

தெறிந்து, கல்வி கற்று நாட்டின் முதல் பெண் மின்சார பொறியாளராக உயர்ந்தவர் லலிதா.

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவரது தந்தை சுப்பாராவ், கிண்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவருக்கு ஐந்தாவது மகளாக 1919-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ம் நாள் பிறந்தார் லலிதா.

15 வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். அதன் பின்னும் கல்வியை விடாமல் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்தார். 1937-ம் ஆண்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து நான்கு மாதங்களிலேயே கணவரை இழந்தார். லலிதாவின் நிலையை மாற்றுவதற்கு, அவருக்குப் பிடித்த படிப்பைத் தொடர ஊக்கம் தந்தார் அவருடைய தந்தை.

உறவினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் 1939-ம் ஆண்டு சென்னை ராணிமேரி கல்லூரியில் முதல் வகுப்பில் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார். தனது சகோதரர்களைப் போல தானும் ஒரு பொறியியலாளராக வேண்டும் என முடிவு செய்தார் லலிதா.

அந்தக் காலத்தில் இந்தியாவில் இருந்த சொற்ப பொறியியல் கல்லூரிகளில், ஆண்கள் மட்டுமே பயின்று வந்தனர். லலிதாவின் தந்தை சுப்பாராவ் கல்லூரியின் முதல்வர் சாக்கோ மற்றும் இயக்குநர் ஸ்டத்தாம் ஆகிய இருவருடன் கலந்துரையாடினார். ஒரு வழியாகப் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க லலிதாவிற்கு அனுமதி கிடைத்தது.

1940-ம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் அடியெடுத்து வைத்தார் லலிதா. ஒற்றைப் பெண்ணாகக் கல்வி பயின்று வந்தார். நிர்வாகத்துடன் பேசி பொறியியல் படிப்பில் பெண்கள் சேரலாம் என்ற விளம்

பரத்தை நாளிதழில் வெளியிட்டார் சுப்பாராவ். அதன் பின்னர் லீலாமா ஜார்ஜ் மற்றும் பி.கே.ரேசியா ஆகிய இரு பெண்களும் சிவில் என்ஜினீயரிங் படிப்பில் லலிதாவிற்கு ஜூனியராக சேர்ந்தனர்.

1944-ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்ததால், பொறியியல் படிப்பின் கால அளவை குறைக்க, பல்கலைக்கழகம் முடிவு செய்தது. ஆகையால் லலிதாவை விட இளையோராக இருந்த இந்த இருவரையும் சேர்த்து, பெண்கள் மூவரும் ஒன்றாக பட்டம் பெற்றனர்.

லலிதா, சிம்லா மத்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பணியில் சேர்ந்தார். தந்தையுடன் சேர்ந்து மின் இசைக்கருவி, புகையற்ற அடுப்பு போன்றவற்றை தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் பணியாற்றினார்.

1948-ம் ஆண்டு முதல் அசோசியேட்டட் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். இந்தியா முழுவதும் சப்ஸ்டேஷன் வடிவமைப்பு, ஜெனரேட்டர் வடிவமைப்பு என பல திட்டங்களில் பணி செய்தார். புகழ்பெற்ற பக்ராநங்கல் அணையின் ஜெனரேட்டர்கள் இவர் வடிவமைத்தவையே.

1964-ம் ஆண்டில் நியூயார்க்கில் நடந்த முதல் பெண்கள் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் சர்வதேச மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார். 1965-ம் ஆண்டு லண்டன் பெண் பொறியாளர்கள் சொசைட்டி மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்ஸ் போன்றவற்றில் முழுநேர உறுப்பினராகவும் இருந்தார்.

சமூகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. தனி ஆளாக நின்று இந்தியாவின் முதல் பெண் பொறியாளராகத் தன்னை நிரூபித்துக் காட்டினார்.


Next Story