ஓ.டி.டியில் வெளியான தமன்னாவின் பாலிவுட் படம்
இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தமன்னாவின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழைத்தொடர்ந்து தெலுங்கு, இந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளவர் நடிகை தமன்னா. சமீபத்தில் அவரது 'பப்ளி பவுன்சர்', 'லஸ்ட் ஸ்டோரிஸ்' போன்ற படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றன.
தற்போது இவர், 'சிக்கந்தர் கா முக்தார்' என்ற பாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் இவருடன், அவினாஷ் திவாரி, ஜிம்மி ஷெர்கில், திவ்யா தத்தா மற்றும் சோயா அப்ரோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நீரஜ் பாண்டே இயக்கிய இப்படம் கடந்த மாதம் 29-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தமன்னாவின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, தமன்னா ஒடேலா 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒடேலா கிராமத்தில் நடைபெற்று வருகிறது