4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 63.04 சதவீத வாக்குப்பதிவு
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
இதனிடையே, 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதனைதொடர்ந்து வரும் 20, 25 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், 96 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற 4ம் கட்ட தேர்தலில் 63.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
ஆந்திரா -68.20%
பீகார் - 55.92%
ஜம்மு-காஷ்மீர் - 36.88%
ஜார்க்கண்ட் - 64.30%
மத்தியபிரதேசம் - 69.16%
மராட்டியம் - 52.93%
ஒடிசா - 64.23%
தெலுங்கானா - 61.59%
உத்தரபிரதேசம் - 58.02%
மேற்குவங்கம் - 76.02%