4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு ... ... 4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 63.04 சதவீத வாக்குப்பதிவு
Daily Thanthi 2024-05-13 12:44:58.0

4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்நிலையில், 4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சீல் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.


Next Story