நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.அங்கு தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 175 சட்டபை தொகுதிகளிலும், 25 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதற்காக பிரபல நடிகரான பவன் கல்யாணுடன் கூட்டணி அமைத்தார் சந்திரபாபு நாயுடு. அதேபோல் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுடனும் கூட்டணி அமைத்தார்.
கூட்டணி பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தெலுங்கு தேசம் 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதேபோல் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவுக்கு 21 சட்டசபை தொகுதிகளும், 2 நாடாளுமன்ற தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 6 நாடாளுமன்ற தொகுதிகளும், 10 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியும் களத்தில் உள்ளது.