உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: வலுவான நிலையை நோக்கி செல்லும் ஆஸ்திரேலியா


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:  வலுவான நிலையை நோக்கி செல்லும் ஆஸ்திரேலியா
x
Daily Thanthi 2023-06-09 14:54:07.0

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469- ரன்களுக்கு அவுட் ஆனது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 296- ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பின்னர் 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 15 ஒவர்கள் நிலவரப்படி 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. 204 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் 8 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் அந்த அணி தற்போதைய நிலையை வைத்து பார்த்தால் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சவாலான ஸ்கோரை நிர்ணையிக்கும் எனத் தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியாவின் கையே இந்த டெஸ்ட்டில் ஓங்கியுள்ளது.


Next Story