உக்ரைனில் மனிதாபிமான நெருக்கடி அதிகரிப்பு: ஐநா ஆணையம்


உக்ரைனில்  மனிதாபிமான நெருக்கடி அதிகரிப்பு: ஐநா ஆணையம்
x
Daily Thanthi 2022-06-17 09:09:14.0

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஏறத்தாழ 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளது. ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனின் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். பலரும் தங்கள் வீடுகள், உடைமகளை இழந்து நிவாரண முகாம்களிலும் அண்டை நாடுகளிலும் தஞ்சம் அடைந்து இருப்பது போரின் கொடூரத்தை காட்டி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் முழுவதும் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்து இருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக உக்ரைனின் கிழக்கு டோன்பாஸ் நகரில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story