உக்ரைனுக்கு 35 காலாட்படை போர் வாகனங்களை... ... #லைவ் அப்டேட்ஸ்: போருக்கு மத்தியில்  உக்ரைன் சென்ற 4 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்
Daily Thanthi 2022-06-17 00:40:36.0


 உக்ரைனுக்கு 35 காலாட்படை போர் வாகனங்களை ஸ்லோவேனியா அனுப்புகிறது.

இதுதொடர்பாக பிரஸ்ஸல்ஸில் நேற்று நடந்த நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து, ஸ்லோவேனியாவின் பாதுகாப்பு மந்திரி மர்ஜான் சரேக் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அந்நாட்டு ஊடகமான RTVSLO தெரிவித்துள்ளது. ஆனால் எந்த வகையான வாகனங்கள் வழங்கப்பட்டன என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், ஸ்லோவேனியா தனது ஆயுதக் களஞ்சியத்தை தீர்ந்துவிட்டதாக மர்ஜான் சரேக் கூறியதாகவும் தெரிவித்துள்ளது. 


Next Story