சென்னை,  நடிகர் விஜய்
Daily Thanthi 2024-08-22 03:33:09.0

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் கொடி இன்று காலை அறிமுகப்படுத்தப்படும் என முன்னதாக விஜய் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாவட்ட தலைவர்கள், சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். நீலாங்கரை - கேஷுவரீனா டிரைவ் சாலையில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடியேற்றும் நிகழ்ச்சியை முன்னிட்டு, விஜய்யின் பெற்றோர் காலில் விழுந்து த.வெ.க. பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆசி பெற்றார்.


Next Story