தடகளம்:தடகளம் 35 கிலோ மீட்டர் ரேஸ் வாக் கலப்பு... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Daily Thanthi 2023-10-04 02:27:37.0

தடகளம்:

தடகளம் 35 கிலோ மீட்டர் ரேஸ் வாக் கலப்பு குழு போட்டியில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது. மனுஜா ராணி - பாபோ ராம் ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 5 மணி நேரம் 51 நிமிடம் 14 விநாடிகளில் அடைந்து 3ம் இடம் பிடித்தது. இதன் மூலம் 35 கிலோ மீட்டர் ரேஸ் வாக் கலப்பு குழு போட்டியில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.

இப்போட்டியில் முதலிடம் பிடித்த சீனா தங்கப்பதக்கத்தையும், 2ம் இடம் பிடித்த ஜப்பான் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது.


Next Story