திருக்குறள் புத்தகத்தை கவர்னருக்கு பரிசாக வழங்கிய த.வெ.க. தலைவர் விஜய்
கவர்னர் மாளிகைக்கு இன்று சென்ற த.வெ.க. தலைவர் விஜய், கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்தார். அப்போது விஜய், கவர்னர் ஆர்.என். ரவிக்கு திருக்குறள் புத்தகங்களை பரிசாக வழங்கினார். அவற்றை கவர்னர் ஆர்.என். ரவி இன்முகத்தோடு பெற்று கொண்டார். இதனையடுத்து கவர்னர் ஆர்.என். ரவி, பாரதியார் கவிதை புத்தகங்களை த.வெ.க. தலைவர் விஜய்க்கு பரிசாக கொடுத்தார்.
இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கவர்னரிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும் பெஞ்சல் புயலுக்கு மாநில அரசு கேட்கும் நிவாரண தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றும், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கவர்னரிடம் மனு அளித்தனர்.