மகரம் - வார பலன்கள்
நிர்வாகத் திறமை மிகுந்த மகர ராசி அன்பர்களே!
சிறப்பான பலன்களை அடைய முயற்சியோடு செயல்படுவீர்கள். ஆனால் சில காரியங்களிலேயே எதிர்பார்க்கும் வெற்றிகளை அடைய முடியும். வரக்கூடிய பணத்தை பெற சிறிது அலைச்சல்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். சிக்கன வாழ்க்கையைக் கடைப்பிடிக்க ஆலோசனை செய்வீர்கள்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பொறுப்புகளில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டிய தருணம் இது. சிறிய தவறுகளும் உயரதிகாரிகளுக்குப் பெரிதாகத் தோன்றும். சொந்தத் தொழிலில் வேலை அதிகம் இருந்தாலும், அதற்கேற்ற வருமானம் காணப்படும்.
கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு சுமாராக வியாபாரம் நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. பணியாளர்களை ஊக்கப்படுத்தி வியாபார அபிவிருத்திக்குப் பாடுபடுவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பெண்களே சாமர்த்தியமாக சமாளித்துவிடுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டினால், நற்பலன் கிடைக்கும்.