பெண்கள் டி20 உலகக்கோப்பை: முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.;

Update:2024-10-17 05:55 IST

image courtesy: Australian Women's Cricket Team twitter

துபாய்,

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் துபாயில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் முதல் அரையிறுதியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

தென்ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ், மரிஜானே காப், சுனே லுஸ், சோலே டிரையோன், அனேரி டெர்க்சென், நடினே டி கிளார்க், சினாலோ ஜாப்டா, மிலாபா, அயாபோங்கா காகா.

ஆஸ்திரேலியா: கிரேஸ் ஹாரிஸ், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, தாலியா மெக்ராத் (கேப்டன்), ஆஷ்லி கார்ட்னெர், லிட்ச்பீல்டு, ஜார்ஜியா வேர்ஹாம், அனபெல் சுதர்லாண்ட், சோபி மோலினெக்ஸ், மேகன் ஸ்கட், டார்சி பிரவுன்.

Tags:    

மேலும் செய்திகள்