ஆஸ்திரேலிய அணியிலிருந்து மெக்ஸ்வீனியை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது - கிளார்க்

ஆஸ்திரேலிய அணியிலிருந்து தொடக்க ஆட்டக்காரரான நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-12-21 10:25 GMT

Image : AFP 

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரரான நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாம் கான்ஸ்டாஸ் இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் மெக்ஸ்வீனி நீக்கம் தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது,

நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை. தேர்வு குழுவினர் இந்த விஷயத்தில் தவறான முடிவை எடுத்து விட்டார்கள். உஸ்மான் கவாஜாவுக்கு 38 வயதாகிறது. அவர் போதுமான ரன்களை எடுக்கவில்லை. தொடரின் பாதியிலேயே மெக்ஸ்வீனியை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்