3வது ஒருநாள் போட்டி; ஜிம்பாப்வே அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசி கசன்பர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

Update: 2024-12-21 10:48 GMT

புலவாயோ,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், 1-0 என ஆப்கானிஸ்தான் தொடரில் முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதல் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் 30.1 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜிம்பாப்வே அணியில் சிறப்பாக விளையாடி சவில்லியம்ஸ் 60 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசி கசன்பர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . 

Tags:    

மேலும் செய்திகள்