ஜாகீர் கான் போலவே பந்துவீசி அசத்தும் சிறுமி... வீடியோவை பகிர்ந்து பாராட்டிய சச்சின்
இந்திய முன்னாள் வீரர் ஜாகீர் கான் போலவே ஒரு சிறுமி பந்துவீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான். இவர் 2011-ம் ஆண்டில் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தவர். ரிவர்ஸ் - ஸ்விங் பந்துவீச்சில் கில்லாடியான இவர் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
இந்நிலையில் ஜாகீர் கான் பந்துவீசும் ஆக்சன் போலவே ஒரு சிறுமி பந்துவீசி அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை கண்ட சச்சின் டெண்டுல்கர் அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளார். மேலும் அந்த பதிவில் ஜாகீர் கானையும் டேக் செய்துள்ளார்.
சச்சின் பதிவிட்டுள்ள அந்த பதிவில், "மென்மையானது, எளிமையானது, பார்ப்பதற்கு அழகானது! சுஷிலா மீனாவின் பந்துவீச்சு ஆக்சனில் உங்கள் சாயல் தெரிகிறது, ஜாகீர் கான். நீங்களும் அதைப் பார்க்கிறீர்களா?" என்று பதிவிட்டுள்ளார்.