விஜய் ஹசாரே கோப்பை: ஹர்திக் ஏன் இடம்பெறவில்லை..? பரோடா கிரிக்கெட் வாரியம் விளக்கம்

விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான பரோடா அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை.

Update: 2024-12-21 10:16 GMT

image courtesy: AFP

பரோடா,

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இன்று தொடங்கியது. ஜனவரி 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் அரியானா, மும்பை உள்ளிட்ட 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.

இதில் கடந்த உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பரோடா அணியில் இடம்பெற்று விளையாடிய இந்திய முன்னணி ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா. விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இடம்பெறவில்லை.

இது குறித்து விளக்கமளித்துள்ள பரோடா கிரிக்கெட் வாரியம், "அவர் (ஹர்திக் பாண்ட்யா) நாக் அவுட் சுற்று போட்டிகளில் விளையாடுவதாக எங்களிடம் தெரிவித்துள்ளார். அதனாலயே லீக் சுற்றில் அவர் அணியில் இடம்பெறவில்லை" என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதம் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு தேவையான சில வீரர்களை இந்த போட்டியில் இருந்து தேர்வாளர்கள் அடையாளம் காண இருக்கிறார்கள்.

அந்த சூழலில் ஹர்திக் லீக் போட்டிகளை தவற விட்டுள்ளது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் ஹர்திக் கடைசியாக கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் 50 ஓவர் போட்டியில் விளையாடினார். அதிலும் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். அதன்பின் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்