ஐபிஎல்: சென்னை அணி தான் கோப்பையை வெல்லும்: முன்னாள் வீரர் நம்பிக்கை

2025 ஐபிஎல் தொடரில் சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்;

Update:2025-03-21 16:37 IST
ஐபிஎல்:  சென்னை அணி தான் கோப்பையை வெல்லும்: முன்னாள் வீரர் நம்பிக்கை

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் நாளை (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என முன்னாள் சென்னை வீரர் ஆல்பி மோர்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

ஐபிஎல் சீசன் வந்துவிட்டது. இந்த வருஷம் யார் வெற்றி பெறுவார்கள் ? சென்னை தான் கோப்பையை வெல்லும் என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்