ஐ.பி.எல்.2025: மெகா ஏலம் எங்கு..? எப்போது நடைபெறுகிறது..? வெளியான புதிய தகவல்கள்

அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது.;

Update:2024-10-21 15:38 IST

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விவரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மெகா ஏலம் நெருங்கும் நிலையில், அது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் 24 மற்றும் 25 -ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் மெகா ஏலத்தை நடத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆஸ்திரேலிய இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதே வேளையில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்தினால் ஆஸ்திரேலிய போட்டிகளை யாரும் பார்க்க மாட்டார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அதிகாலை 5 மணிக்கு தொடங்கி மதியம் 12 அல்லது ஒரு மணிக்கு முடிந்துவிடும். இதனால் ஐபி.எல். மெகா ஏலத்தை மதியம் தொடங்கி இரவு வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்