ஆப்கானிஸ்தான் வீரருக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி. - காரணம் என்ன..?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

Update: 2024-12-21 03:52 GMT

Image Courtesy: @ACBofficials

துபாய்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், 1-0 என ஆப்கானிஸ்தான் தொடரில் முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆடிய ஆப்கானிஸ்தானின் பசல்ஹக் பரூக்கிக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நடுவரின் முடிவில் மறுப்பு தெரிவித்ததற்காக பசல்ஹக் பரூக்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்