குர்பாஸ், ஜத்ரான் அரைசதம்... ஆஸ்திரேலியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

சிறப்பாக பந்துவீசிய கம்மின்ஸ், ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

Update: 2024-06-23 02:08 GMT

செயிண்ட் வின்சர்ட்,

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இப்ரஹிம் ஜத்ரான் மற்றும் குர்பாஸ் இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இருவரும் அரைசதம் கடந்தனர். இந்த ஜோடி 118 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. குர்பாஸ் 60 ரன்களும், ஜத்ரான் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி வலுவான நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான், 180 ரன்கள் வரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.

சிறப்பாக பந்துவீசிய கம்மின்ஸ், ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். ஜாம்பா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்