ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரஹ்மத் ஷா சதம்.. சரிவிலிருந்து மீண்ட ஆப்கானிஸ்தான்

ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களில் ஆல் அவுட் ஆனது.;

Update: 2025-01-05 01:47 GMT

image courtesy: twitter/ @ICC

புலவாயோ,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், 2-வது டெஸ்ட் புலவாயோவில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது.

இதன் முதல் இன்னிங்சில் முறையே ஆப்கானிஸ்தான்157 ரன்களும், ஜிம்பாப்வே 243 ரன்களும் அடித்தன. பின்னர் 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் ஆரம்ப கட்டத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்து திண்டாடியது.

இந்த இக்கட்டான சூழலில் ரஹ்மத் ஷா சிறப்பாக விளையாடி சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். நிலைத்து நின்று ஆடி 3-வது சதத்தை எட்டிய ரஹ்மத் ஷா 139 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் இணைந்த யாரும் நிலைக்கவில்லை. இறுதி கட்டத்தில் இஸ்மாத் ஆலம் அரைசதம் அடித்து அணி வலுவான முன்னிலை பெற உதவினார்.

3-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. இஸ்மாத் ஆலம் 64 ரன்களுடனும், ர்ஷீத் கான் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் 205 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்