147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பாபர் அசாம் - ஷான் மசூத் ஜோடி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் பாலோ ஆன் ஆனது.;

Update:2025-01-06 10:42 IST

image courtesy: ICC

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 615 ரன்களும், பாகிஸ்தான் 194 ரன்களும் அடித்தன.

இதனையடுத்து பாலோ ஆன் ஆன நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 'பாலோ ஆன்' ஆன பிறகு முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் அமைத்த தொடக்க ஜோடி என்ற மாபெரும் சாதனையை பாபர் அசாம் - ஷான் மசூத் படைத்துள்ளனர்.

அந்த பட்டியல்:-

1. பாபர் அசாம் - ஷான் மசூத் - 205 ரன்கள்

2. கிரெம் சுமித் - நீல் மெக்கன்சி - 204 ரன்கள்

3. தமிம் இக்பால் - இம்ருல் கயஸ் - 185 ரன்கள்

4. மார்கஸ் ட்ரெஸ்கோதிக் - மைக்கேல் வாகன் - 182 ரன்கள்

5. கிரஹாம் கூச் - மைக்கேல் அதர்டன் - 176 ரன்கள்.

இந்த போட்டியின் 3-வது நாள் முடிவில் பாகிஸ்தான் 1 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் அடித்துள்ளது. ஷான் மசூத் 102 ரன்களுடனும், குர்ரம் ஷசாத் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாபர் அசாம் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 208 ரன்கள் அடித்தாக வேண்டும் என்ற நிலையில் போராடி வருகிறது. அந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்