சாம்பியன்ஸ் டிராபி தொடர்; வரும் 12ம் தேதிக்குள் அணியை அறிவிக்க வேண்டும் - ஐ.சி.சி
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.;
துபாய்,
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இது பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
இருப்பினும், இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை வரும் 12-3 தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் வீரர்கள் காயம் காரணமாக விலகினால் மாற்றம் செய்து கொள்ளலாம். வீரர்களை மாற்ற பிப்ரவரி 13-ந் தேதி வரை அனுமதி உள்ளது. இங்கிலாந்து அணி மட்டுமே இந்த தொடருக்கான அணியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.