2வது டி20: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

50 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.;

Update:2024-12-14 05:27 IST

ஹராரே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது..இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் செடிகுல்லா அடல் ஆகியோர் களம் இறங்கினர்.இதில் குர்பாஸ் 11 ரன்னிலும், செடிகுல்லா அடல் 18 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ஜுபைத் அக்பரி 1 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து தர்வீஷ் ரசூலி மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஓமர்சாய் 28 ரன்னிலும், அடுத்து வந்த முகமது நபி 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய தர்வீஷ் ரசூலி அரைசதம் அடித்த நிலையில் 58 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து குல்பைடின் நைப் மற்றும் ரஷித் கான் ஜோடி சேர்ந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடியது. தொடக்கம் முதல் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி  அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 17.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணி அணி ஆட்டமிழந்தது. இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்