நெருப்பு அலாரம்!

ஆம்புலன்ஸ், தீயணைக்கும் வண்டியின் சைரன் ஆகியவற்றை எங்கிருந்தாலும் அடையாளம் கண்டு வழிவிடுகிறோம்.

Update: 2023-08-25 04:15 GMT

சிறுவயதிலிருந்து காதில் கேட்டு பழகிய ஒலி. ஆனால் இந்த நவீன யுகத்தில் அவசர கால தடுப்பு வசதிகள் இத்தனை வந்த பின்னும் மணி அல்லது சைரன்களை நாம் ஏன் பயன்படுத்துகிறோம்?

1990-ம் ஆண்டில் தேசிய தன்னார்வலர் நெருப்புத்தடுப்பு கவுன்சிலிலும் இதுதொடர்பாக பேசப்பட்டது. அப்போது அமெரிக்காவின் மேரிலேண்டைச் சேர்ந்த கிரிஷ் ஹாஸ் என்பவர் பேஜர்ஸ் மற்றும் செல்போன்களை விட சைரன்கள் சிறப்பான தகவல்தொடர்பு கருவியாக அவசர காலங்களில் பயன்படும் என உறுதியாக கூறினார். மேலும் வேறு ஒரு ஒலியை விட தொன்மையான சைரன் ஒலி மக்களுக்கு மிகவும் பழக்கமான ஒன்றும்கூட. எனவே சைரன் ஒலி கேட்டால் மக்கள் உஷாராகிவிடுவார்கள் என்பதும் இதில் பிளஸ் பாய்ண்ட்.

கனடாவின் ஒன்டாரியோ பகுதி தீயணைப்பு நிலையம் பத்தாண்டுகளுக்கும் மேலாக சைரனை பயன்படுத்தவில்லை. ஆனால் டிராபிக்கில் தீயணைப்பு வீரர் சிக்கிக்கொண்டபோதுதான் சைரனின் அருமை தெரிந்து மீண்டும் அதனைப் பயன்படுத்த உத்தர விட்டது.

Tags:    

மேலும் செய்திகள்