இந்தியர்களாகிய நமக்கு தங்கம் என்பது அத்தியாவசியப் பொருள். என்ன விலை விற்றாலும் தங்கத்தை வாங்கிக் குவிக்கும் இந்தியா, தங்க உற்பத்தியிலும் முதலிடத்தில் இருக்கும் என்று நினைக்கிறீர்களா...? அதுதான் இல்லை. தங்கத்தை இறக்குமதி செய்வதில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம்.
அப்படியென்றால், எந்த நாடுகள் தங்கம் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கின்றன என்று தெரிந்து கொள்வோமா...?
இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது, சீனா. வருடத்திற்கு சுமார் 500 டன்கள் தங்கம் கண்டெடுக்கப்பட்டு, அவை நகைகளாக மாற்றப்படுகின்றன. மொத்த தங்க உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு மட்டும், 11 சதவிகிதம். அவர்களிடம், 3 ஆயிரம் டன்கள் தங்கம் கையிருப்பும் உள்ளது.
சீனாவிற்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியா 2-வது இடத்தை பிடிக்கிறது. அங்கு, 320 டன் தங்கம் (ஒரு வருடத்தில்) உற்பத்தி செய்யப்படுகிறது. 3-ம் இடம் வகித்த அமெரிக்காவை, நான்காம் இடத்திற்கு தள்ளிய பெருமை ரஷியாவிற்கு உண்டு. ஆம்..! 2014-ம் ஆண்டு வரை அமெரிக்கா 3-ம் இடத்தில் இருந்தது. ஆனால் ரஷியாவில், 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் 300 டன் தங்கம் எல்லா வருடமும் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்பட்டதன் விளைவாக, ரஷியா 3-ம் இடத்திற்கு முன்னேறிவிட்டது. ரஷியாவில், 5,300 ஆயிரம் டன் தங்கம் கையிருப்பும் உள்ளது.
இந்த 'டாப்-3' நாடுகளை தொடர்ந்து அமெரிக்கா, கனடா, கானா, இந்தோனேஷியா, பெரு, கஜகஸ்தான் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் 'டாப்-10' பட்டியலில் இடம் பிடிக்கின்றன.
இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது, சீனா. வருடத்திற்கு சுமார் 500 டன்கள் தங்கம் கண்டெடுக்கப்பட்டு, அவை நகைகளாக மாற்றப்படுகின்றன. மொத்த தங்க உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு மட்டும், 11 சதவிகிதம்.