ஜப்பானில் 7.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை
அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.;
டோக்கியோ,
ஜப்பானின் தெற்கு தீவு கியூஷி பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4:42 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த நிலநடுக்கம், ஜப்பானின் நிச்சினனுக்கு வடகிழக்கே 20 கி.மீ தொலைவில் 25 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக மியாசாகி, கொச்சி, ஒய்டா, ககோஷிமா மற்றும் எகிம் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.